துணை நடிகை புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரை அழைத்து வந்து விசாரணை

0
470

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணை நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் நள்ளிரவு மதுரைக்கு அழைத்து வந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்த அழைத்துச் வந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மணிகண்டனின் ஜாமின் மனுவை ஜூலை 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here