சென்னை ரப்பர் குடோனில் தீ அணைக்க திணறும் வீரர்கள்

0
894

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ரப்பர் குடோனில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ரப்பர் பொருட்கள் எரிந்து நாசமாகின.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த மண்ணூர்பேட்டை புது பிள்ளையார் கோவில் தெருவில் எஸ்.வி பெள்டிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தொழிற்சாலைகளுக்கு தேவையான ரப்பர் பெல்டுகள் மற்றும் ரப்பர் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று 4 மணி அளிவில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரப்பர் குடோனில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அந்த குடோனில் இருந்த 1 கோடி மதிப்பிலான ரப்பர் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜே.ஜே நகர் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ரப்பர் பொருட்கள் என்பதால் அந்த தீயை அணைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் பல்வேறு முறைகளை கையாண்டு தீயை அணைக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ரப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here