தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குரங்கணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பகுதியில் போடப்பட்டுள்ள புதிய சாலை ஆனது தரமாக உள்ளதா? என்பதை கண்டறிய ஆட்சியர் அந்த சாலையை சுமார் ஒரு அடி தூரம் வரைக்கும் தோண்டி ஆய்வு செய்தார். இதில் சக அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஊரக வளர்ச்சித் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.