நவீன அறிவியலின் மக்கள் தொடர்பு சாதனம் வீடியோ கான்பரன்ஸ். ஆனால் அதைவிட சசிகலா நடத்தும் ஆடியோ கான்ஃபரன்ஸ் தமிழ்நாட்டு அரசியலை கலக்கி வருகிறது. விரைவில் சதம் அடித்து விடும் வேகத்தில் 80க்கும் மேற்பட்டோருடன் பேசி அவர் தனது அரசியல் வருகையை முன்மொழிந்து வருகிறார்.
சென்னை திண்டிவனம் திருச்சி என்று ஒவ்வொரு இடமாக தொண்டர்களிடம் பேசி தற்போது தமிழ்நாட்டின் கடை பகுதியான சாத்தான்குளம் வரைக்கும் வந்துவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தைச் சேர்ந்த செந்தில் விநாயகம் கடந்த 2007 ல் இருந்து அதிமுக இளைஞர் பாசறை செயலாளராக இருந்து வந்தார். 2020ம் ஆண்டில் இருந்து சசிகலாா பேரவையில் தெற்கு தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் செந்தில் விநாயகத்திடம் கடந்த வாரம் புதன்கிழமை சசிகலா போனில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதுகுறித்து செந்தில் விநாயகத்திடம் கேட்ட போது சசிகலா தன்னிடம் பேசியதை உறுதி செய்தார்.
அந்த ஆடியோவில் செந்தில் விநாயகம் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் நீங்கள் விரைவில் மக்கள் பணி ஆற்ற வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் துணையாக இருப்பேன். நான் உங்களை விரைவில் சந்திப்பேன் என்று பேசியுள்ளார்.
(கீழே ஆடியோ உள்ளது)