உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவின் தரவரிசை 40-வது இடத்திலிருந்து 34-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீடு ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறனுக்கு பங்களிக்கும் பயண மற்றும் சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு உதவும் காரணிகள் மற்றும் கொள்கைகளின் தொகுப்பை அளவிடுகிறது.
உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது. இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், இங்கிலாந்துக்கு பதிலாக அமெரிக்கா முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது.
முதல் 10 இடங்களில் இங்கிலாந்து 6-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (7-வது), இத்தாலி (8-வது), கனடா (9-வது) மற்றும் சுவிட்சர்லாந்து (10-வது) இடத்திலும் உள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா, துணை பிராந்தியத்தின் மிகவும் போட்டி நிறைந்த “தெற்காசியாவின் டி அண்ட் டி (பயண மற்றும் சுற்றுலா) தரவரிசையில் ஆறு இடங்களை முன்னேறி உலக அளவில் 34 வது இடத்தைப் பிடித்தது.
அறிக்கையின்படி, சீனா, மெக்சிகோ, மலேசியா, தாய்லாந்து, பிரேசில் மற்றும் இந்தியா அதிக வருமானம் கொண்ட பொருளாதார நடுகள் அல்ல, ஆனால் ஒட்டுமொத்த பட்டியலில் முதல் 35 இடங்களைப் பெறுகின்றன.
இந்தியா அதன் ஒட்டுமொத்த சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டு (டிடிசிஐ) மதிப்பெண்ணில் மிகப் பெரிய சதவீத முன்னேற்றத்தைக் காட்டி உள்ளது. இது முதல் 35 இடங்களில் ஒரே குறைந்த நடுத்தர வருமான நாடாக உள்ளது.
துணை பிராந்திய கண்ணோட்டத்தில், நாடு (இந்தியா) சிறந்த விமான உள்கட்டமைப்பு (33-வது இடம்) மற்றும் தரை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு (28-வது இடம்), சர்வதேச திறந்தநிலை (51-வது) மற்றும் இயற்கை (14-வது இடம்) மற்றும் கலாச்சார வளங்களை (8-வது) கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியா இன்னும் அதன் சுற்றுச்சூழல் (98-வது இடம்), சுற்றுலா சேவை உள்கட்டமைப்பு (109-வது இடம்) மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (128-வது இடம் ) ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
பிலிப்பைன்ஸ் நான்கு இடங்களை முன்னேற்றி உலக அளவில் 75-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் 121-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு தரவரிசையில் ஆசியா-பசிபிக் வேகமாக வளர்ந்து வரும் பயண மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.
ஜப்பான் ஆசியாவின் மிகவும் பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாக உள்ளது. உலகளவில் 4-வது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சீனா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலா பொருளாதார நாடாகவும் உலகளவில் 13-வது போட்டியாகவும் உள்ளது.