வருமானத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அசோக் லாவாசா மனைவி நாவல் சிங்காலுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், அவர் பல நிறுவனங்களில் சுயாதீன இயக்குநராக சம்பாதித்த வருமானத்துடன் தொடர்புடையது. இருப்பினும், இது ஒரு வழக்கமான விஷயம் தான் என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.