சோழவந்தான் அருகே அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

0
916

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்பராஜ்.தனது நண்பர் பரத் என்பவருடன் சோழவந்தான் அடுத்த விக்கிரமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நாராயணபுரம் ஊத்து அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இன்பராஜ் பலியானார்.


அவரது நண்பர் பரத்ரிசி காயங்களுடன் உயிர் தப்பினார்.சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here