தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக திருச்செந்தூர் கோவில் கடற்கரை அருகே கொண்டு வரப்பட்டது. பின்னர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டது. இதில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.








