நெல்லை அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கொடூரன்- ஆதரவற்று வாடும் இரு பெண் குழந்தைகள்

0
1395

செங்கோட்டை மேலூரைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகள் மாரித்தாய் (28 ). டெய்லர். இவரும் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரும் குடும்பத்தார் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு நெல்லை அருகே உள்ள பழைய பேட்டையில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 7,6 வயதுகளில் பெண் குழந்தைகள் இரண்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள அழகனேரியில் மாரித்தாய் வசித்து வந்தாள்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் ஒருவருடன் மாரித்தாய் வசித்த வீட்டுக்கு வந்த செல்வகுமார், இரு குழந்தைகள் கண்ணெதிரே அவரை அடித்து உதைத்து கத்தரிக்கோலால் தாக்கி குற்றுயிராக்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று காலை இறந்தார்.

இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆதரவற்று பரிதவித்து நின்ற இரு குழந்தைகளையும் நெல்லை சந்திப்பு சரணாலயத்தில் சேர்த்தனர். செல்வ குமாரையும் அவரது நண்பரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் வரை உடலை பெற மாட்டோம் என்று மாரித்தாய் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால்ஆதரவற்று நிற்கும் இரு குழந்தைகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு குழு தலைவர் மீரான் குளம் முத்துராமன் செயலாளர் நம்பி குமார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here