கோவை ஈச்சனாரி பகுதியில் கற்பகம் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு நான்கு வருடங்கள் படித்து முடித்து ஹவுஸ் சர்ஜன் என சொல்லப்படும் ஓராண்டு பயிற்சி மற்றும் பணிபுரியும் டாக்டர்கள் உள்ளனர். இவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தங்குமிடம் வழங்காமல் சாப்பாடு அதற்கான வழிவகை செய்யாமல், உதவித் தொகையாக ரூபாய் 2,500 மட்டும் வழங்குவதாகவும் கூறுகின்றனர்.
கொரோனா பரவும சூழ்நிலையில் எங்களுடைய உயிரை பணயம் வைத்து நாங்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்கள் கல்லூரி நிர்வாகம் எல்லா விதமான சலுகைகளையும் எங்களுக்கு மறுக்கிறது. அரசு மருத்துவமனையில் பணி புரிய கூடிய பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை 23 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் சாப்பாடு மற்றும் தங்குமிடம் 23 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.














