தமிழ்நாடு அரசு கல்விக்கொள்கை, நடைமுறை பற்றி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திமுக.தமிழ்நாட்டில் நீட்டை நடத்த விடமாட்டோம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். நீட் விவகாரத்தில் மத்திய (ஒன்றிய) அரசு பிடிவாதம் பிடித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.













