பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை தொடர்ந்து மாநில அரசு இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. இதுகுறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ’இப்போது முழுதும் மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
இனி, பெண்கள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க ஆசிரியைகளே நியமிக்கபடுவார்கள். பாலியல் சீண்டல்களை தடுக்க தகுந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்பு அதுபற்றி முடிவெடுத்து அவர் அறிவிப்பார்’ என்றார்.