கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயங்கி வருகிறது.
இந்த கொல்லம் விரைவு ரயில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை வழியாக சென்னைக்கு செல்கிறது. சென்னைக்கு செல்லும் போது மாலை 4.40 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்திலும், 4.45 மணிக்கு திருத்தங்கல் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
ஆனால், மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் இந்த விரைவு ரயில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களை நள்ளிரவு 01.45 மணிக்கு நிற்காமல் கடந்து செல்கிறது. .
விருதுநகருக்கு அடுத்து திருவில்லிபுத்தூரில் மட்டும் நின்று செல்கிறது. இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும், நாடாளுமன்றத்தில் விவாதம் செய்த பின்பும் மத்திய அரசு நட விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை, தென்காசி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினருடன் கலந்து பேசினார்.
மேலும், சிவகாசி தொழில் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்தது.
இதையடுத்து, சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில், திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, சிவகாசி மாநகராட்சி பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் இணைந்து 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.