கோவில்பட்டியில் தமிழை வழக்காடு மொழியாக்க ஆர்ப்பாட்டம்

0
381

கோவில்பட்டியில் உலக திருக்குறள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பு இந்திய ஒன்றிய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். செம்மொழியாகிய நமது தமிழை இந்திய ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும் முதலில் உயர் நீதிமன்ற கிளைகளும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்திற்கு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாநிலத் துணைத் தலைவர் க.கருத்துப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கி.பிரபு கிருஷ்ணன் வரவேற்றார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here