தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நெடுங்குளம் ஊர் அருகே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. ஊருக்கும் நெடுஞ்சாலைக்கும் அருகில் இருப்பதனால் குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுகிறது. போக்குவரத்து அபாயம் உள்ளது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என்பதனால் இன்று ஊர் முழுக்க கருப்பு கொடிகள் ஏற்றினர். காலை ஊர் மக்கள் அனைவரும் திரண்டு சமுதாய நலக்கூடத்தின் முன்பு கண்ணை கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.