தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலையின் உரிமையாளர் ராம்குமார் என்பவரை நாசரேத் போலீசார் சிறிது நேரத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே பதுங்கி இருந்த ராம்குமாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விபத்துக்கான காரணம் என்ன? அதிக அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.










