பரபரப்பை உருவாக்கிய பைபர் படகு

0
1479

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக போலீசிற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குளத்தூர் போலீசார் அங்கு சென்று படகை சோதனையிட்டனர். விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல உப்பள அதிபருக்கு அந்த பைபர் படகு சொந்தமானது எனவும் அவர் மாலை வேளையில் கடற்கரையில் சாகச விளையாட்டுக்காக வாங்கிய இந்த பைபர் படகு காற்றின் வேகத்தில் கயிறு அறுந்து இங்கு கரை ஒதுங்கியது தெரிய வந்தது

தகவல் அறிந்த உப்பள அதிபர் படகுக்கான உரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டி தனது படகை மீட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here