திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தொடங்கியது.

2
1561

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, தேவார இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here