பிலிப்பைன்ஸ் படகு விபத்து; 7 பேர் பலி

0
632

பிலிப்பைன்சில் அக்லான் மாகாணத்தில் போராகே தீவில் படகு போட்டிக்கான பயிற்சியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். கரைக்கு அரை கி.மீ. தொலைவில் இருந்தபொழுது படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடுமையான அலைகள் வீசியதில் படகு கவிழ்ந்து உள்ளது என கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் சீனா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here