நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்த இளைஞர் கண்ணன் இன்று பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக 5 பேர் மீது அவர் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில், 4 பேர் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதில் இன்னும் உண்மை கண்டறியப்படவில்லை. அதேவேளை, பெண் எஸ்ஐ ஒருவர் போட்டோவை எடுத்துச்சென்று துப்பு கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை காவல்துறையினர் ஆராயவேண்டியுள்ளது.
சாதி மோதல் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளில் அரசு சார்ந்தவர்கள் தூண்டுதல் இருப்பது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. இந்த போக்கை மாற்ற அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்ற கருத்து மக்களைடையே உள்ளது.