தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது. தொடர்ந்து சூறாவளி எழுந்து, காற்று 30 – 50 கி.மீ. வேகத்தில் கேரள பகுதி, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வீசும் எனக் கூறப்பட்டது.
அதற்கேற்ப, இன்று அதிகாலையிலேயே கொல்லம் கடற்கரையில் பலத்த காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. ஆனாலும், பலத்த சேதம் இல்லாதவாறு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
ஏற்கனவே, கடற்கரை பகுதி மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். கொரோனா நோயாளிகளுக்கு தனி முகாம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், கடற்கரை மீனவ கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்தனர்.













