பங்களாதேஷில் இருந்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் பார்சல் சர்வீஸ் மூலம் கொண்டு வரப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது..
விசாரணையைச் சென்னையில் தொடங்கி, கோவில்பட்டி, நெல்லை, மதுரை என மீண்டும் சென்னைக்கே வந்து இருவரை கைது செய்த காவல்துறையினர்.
சென்னை கொண்டித் தோப்புப் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் மற்றும் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் ஆகிய இருவரை மயிலாப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தை மூலம் விற்க முயன்ற மேலும் இருவரை பொறிவைத்து பிடித்த காவல்துறை.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (25) மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்காப்பியன் ஆகிய இருவர் திருவல்லிக்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே ரெம்டிசிவிர் கள்ளச் சந்தை விற்பனை தொடர்பாக சென்னையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.













