குகைக்கரடி இனத்தை அழித்த மனித இனம்

0
1460

குகைக் கரடிகள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்த கரடி வகையை சேர்ந்தவை. இவை ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளன. மாமிசம் சாப்பிடாமல் காய்கறிகளை உண்டு வாழ்ந்தன.
இவற்றைப் பற்றி சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விரினா ஷுனேமன் தலைமையில் ஒரு ழுவினர் ஆராய்ச்சி நடத்தினர்.
சுவிட்சர்லாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி இத்தாலி மற்றும் செர்பியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட குகைக் கரடிகளின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சைட்டோபிளாஸில் ஒரு கோள அல்லது நீளமான உறுப்பின் டி.என்.ஏவை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் முடிவில் விரினா ஷுனேமன் கூறியதாவது:
இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் குகைகளிலேயே பெரும்பாலும் கண்டெடுக்கப்பட்டன. இவை தூக்கம் மற்றும் ஓய்வுக்காக குகையில் அதிக நேரம் கழித்துள்ளன.
இரண்டு பனிக் காலங்களையும், பல குளிரான நிகழ்வுகளையும் சகித்து இவற்றின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவு நிலையான இருந்ததாகவும் தோன்றுகிறது.
அதன்பின்பு அவற்றின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது ஐரோப்பாவில் நவீன மனிதர்கள் தோன்றிய காலம்.
மனித தலையீடு, சுற்றுச்சூழல் மாற்றங்கள் அல்லது இவை இரண்டு கலந்த காரணங்களால் அவை அழிந்துள்ளன.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here