கோவில்பட்டியில் ரெம்டிசிவீர் கடத்திய மெடிக்கல் சகோதரர்கள் கைது

0
1137

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு திரு. தங்கராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. மாதவராஜா, திரு. சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமைக் காவலர் திரு. முருகன், காவலர்கள் திரு. ஸ்ரீராம் மற்றும் திரு. உலகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் களமிறங்கினர்.

தனிப்படையின் ஆய்வில். கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்தில் கோவில்பட்டி காந்தி நகர், நேரு நகரைச் சேரந்த ஆறுமுகநயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோர் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து கள்ளச்சந்தையில் வாங்கி அதை சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்திற்கு குப்பி 20,000க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சகோதரர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 2,20,800 மதிப்பிலான 46 ரெம்டெசிவர் குப்பிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here