தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் .ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், முதல் நிலைக் காவலர்கள் எழில்நிலவன், ராஜ்பாரத் ஆகியோர் அடங்கிய போலீசார் இன்று
ரோந்து பணியில் ஈடுபட்ட போது திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம், வேளாங்கண்ணி கோவில் தெருவைச் சேரந்த வேலாயுதம் மகன் விநாயகமூர்த்தி (45) என்பவர் அவரது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர் , 60 லிட்டர் ஊரல், சாராயம் காய்ச்சுவதற்கான பாத்திரங்கள், அடுப்புகள் மற்றும் இதர தளவாட சாமான்கள் ஆகியவற்றை அழித்தனர்.
சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய எதிரியை கைது செய்து அவரிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. இராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
இதுபோன்று கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







