நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள இளம் சிறார் சிறைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வஅரவிந்த் போக்சோ சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலையில் வழக்கம் போல் உணவிற்காக அறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தவர்களை திறந்துவிட்டனர். அப்போது செல்வஅரவிந்த் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி வெளியில் குதித்து தப்பிவிட்டார் .
சிறைக் காவலர்கள் வட்டாரம் முழுக்க அவரை தேடினர். அப்போது மூலக்கரைப்பட்டி அருகே இளையார்குளத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த செல்வஅரவிந்தை பிடித்தனர்.