6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

0
1218

பாளையங்கோட்டை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் சாலை பெல் பள்ளி முன்பு வாகன சோதனை நடத்தி, சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 6 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்றும், நடுவக்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்துக்குட்டியிடம் கஞ்சா வாங்கி வந்து பாளையங்கோட்டை பகுதியில் விற்பவர் என்றும் தெரியவந்தது.

இளைஞரை பிடித்த பாளையங்கோட்டை போலீசாரை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் பாராட்டி வெகுமதி வழங்கினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here