ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

0
578

முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழே ஆற்று மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மோகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் முத்து சுந்தர் (எ) சுந்தர் (20) என்பதும், அவர் சட்ட விரோதமாக சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முத்து சுந்தர் (எ) சுந்தரை கைது செய்து அவரிமிருந்த 14 மூட்டை ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here