அக்டோபர் 21 ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
விருப்ப மனுக்கள் செப்.,23 ம் தேதி பகல் 3 மணி வரை விநியோகம் செய்யப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை செப்.,23 பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு திங்கள் கிழமை நடைபெறுகிறது. விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது என முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்து உள்ளனர்.