திருச்செந்தூர் சப்-இன்ஸ்பெக்டரிடம் மோசடி

0
1491

திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்த பாபுராஜ் திருச்செந்தூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் திருச்செந்தூரில் உள்ள ஒரு வங்கியின் மேலாளர் என்றும், உங்கள் ஏ.டி.எம். கார்டின் மேல் குறிப்பிட்டுள்ள எண்களை தெரிவியுங்கள் என்றும் கூற அதனை நம்பிய பாபுராஜ் எண்களை கூறியுள்ளார்.

பின் செல்போனிற்கு வந்த ஓ.டி.பி. (ஒரு முறை மட்டும் வரும் ரகசிய எண்) எண்ணை கேட்க 3 முறை நபர் கேட்டு பெற்றுள்ளார் பாபுராஜ், சில நாட்களுக்கு முன்பு வங்கி கணக்கை சரி செய்த போது அதில் ரூ.30 ஆயிரம் 3 முறை தலா 10 ஆயிரம் வீதம் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பாபுராஜ், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here