வேலூர் சத்துவாச்சாரியில் சுரேஷ் மற்றும் அவரது நண்பர் கலீலை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். காவல்நிலையத்தில் போலீசாரின் விசாரணையின்போது சுரேஷ் மயக்கமடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
சுரேஷ் மர்ம மரணம் குறித்து ஏடிஎஸ்பி விஜயகுமார், டிஎஸ்பிதுரைப்பாண்டியன் ஆகியோர் விசாரித்துவருகின்றனர். போலீஸ் காவலில் வாலிபர் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.















