பிலிப்பைன்சில் லாரி கவிழ்ந்து 20 பேர் பலி

0
1340

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே போலி நகர் அருகே கடற்கரை பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சிலர் தங்களது சொந்த ஊருக்கு லாரி ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். திடீரென அந்த லாரி குறுகலான மலை இடுக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒன்று முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். தொடர்ந்து 19 பேர் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

லாரியின் பிரேக்குகள் சரியாக வேலை செய்யாததே விபத்திற்கு காரணம் என அதனை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். விபத்திற்கான சரியான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.ணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here