நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சிகளை விட அரசு ஊழியர்கள்தாம் தேர்தல் பணியில் தீவிரமாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக வருவாய் கடைநிலை ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் யாவரும் வீடு, வீடாக சென்று வாக்களர்களிடம் ஆதார் அட்டை, அடையாள அட்டை நகல் சேகரிக்கிறார்கள்.
உயர் அதிகாரிகளின் எவ்வித உத்தரவும் இன்றி இவர்கள் இவ்வளவு கடமையுணர்ச்சியோடு செயல்படக்காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, தேர்தல் பணிக்காக அந்தந்த பகுதிக்கு பொறுப்பேற்கவரும் அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கவே அர்ப்பணிப்புடன் இப்படி பணியாற்றி வருகின்றனராம்.
அதை வைத்து கட்சியினர், ஆதரவாளர்களை அடையாளம் கண்டு அன்பளிப்பு வழங்க ஆளுங்கட்சியினர் தயாராக உள்ளனர்.
இதுவரை தேர்தல் பணி என்றால், வாக்கு செலுத்தும் அன்று செய்யும் வேலையைத்தான் எண்ணியிருந்தோம்.









