தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் இதுவரை நிரந்தரமாக நியமனம் செய்யப்படவில்லை. எனவே இங்கு மகப்பேறு வசதிக்காக அனுமதிக்கப்படும் பெண்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த மருத்துவமனைக்கு புதிய மகப்பேறு மருத்துவர் நியமனம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் மகளிர் வலியுறுத்தி வருகின்றனர்.









