காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

0
1345

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here