I உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் வேட்பு மனு தாக்கலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய விசாகன் ‘நேற்றுவரை 1172 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. இன்றும் பெரும்பாலானோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தேர்தல் மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள் 30 பறக்கும் படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி காமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. குறைவான தொற்று உள்ளவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வெளிப்படையான தேர்தல் நடைபெற மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும்’ என்றார்.