விளாத்திகுளத்தை சேர்ந்த சக்தி என்ற முனீஸ்வரன் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் நகை பணம் மோசடி செய்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மற்றொரு பெண்ணிடமும் போலீஸ்காரரிடமும் கூட மோசடி செய்ததாக பின்னர் புகார் வந்தது.
அண்டா சாமியார் என்று அவரை பலரும் கேலியாக அழைத்து வந்தனர். தற்போது அவரை விளாத்திகுளம் பேரூராட்சி 15ஆவது வார்டு வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இதை கேலி செய்து விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாறி வருகின்றனர்.









