தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் அரசு சார்ந்த பல்வேறு திட்டங்கள் நடைபெறும் இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.








