சிலை அவமதிப்பு …காங்.ஆர்ப்பாட்டம்

0
939

நெல்லை மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இந்த சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தபட்டது. இதனையடுத்து இந்த சிலைக்கு இரும்பு கம்பியால் ஆன கூண்டு அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவில் இந்த கூண்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து ராஜீவ்காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலை அவமதிப்பை கண்டித்து நெல்லையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here