சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று சிறிது காலமே பணியாற்றிய ராஜ் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பில் உயிரிழந்தார்.
இன்று மாலை காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி நெல்லைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
ராஜுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஒன்றாம் தேதி டி எஸ் பி ஆக பதவியேற்க இருந்த நிலையில் இந்த பரிதாப மரணம் நிகழ்ந்துள்ளது.