தென்திருப்பேரை அருகே உள்ள புளியமரத்தெரு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா (30)திருச்சியில் தங்கியிருந்து கூல்டிரிங்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் குலசை தசரா விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கோவிலுக்கு மாலைபோட்டு விரதம் இருந்துவந்தார்.
இதையடுத்து இன்று காலை அவர் அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.








