களக்காடு அருகே உள்ள மாவடி பகுதியை சேர்ந்த ஒருவரது 17 வயது மகள், நெல்லையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் நாங்குநேரி அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில் தனது மகளை களக்காடு அருகே உள்ள எஸ்.என். பள்ளிவாசலை சேர்ந்த பஞ்சுதுரை மகன் விஷ்வந்த் மற்றும் அவரது அண்ணன் நவீன் ஆகியோர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் மூன்றடைப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.








