தவறாகும் வானிலை தகவல் – சரிசெய்யுமா ஒன்றிய அரசு?

0
877

’பெய்யும் என்பார் பெய்யாது, பெய்யாது என்பார் பெய்து விடும்’ என்பது வானிலை ஆய்வு மையம் பற்றிய பொது மக்கள் கணிப்பு. அப்படித்தான் தற்போது பெய்த கன மழையை கணிக்கத் தவறி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

பெய்யும் என்பார் பெய்யாது, பெய்யாது என்பார் பெய்து விடும்’ வானிலை ஆய்வு மையம் பற்றிய பொது மக்கள் கணிப்பு. அப்படித்தான் தற்போது பெய்த கன மழையை கணிக்கத் தவறி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

சென்னையில் தற்போது பெய்த கன மழைக்கான காரணம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ’காற்றின் மேலடுக்கு சுழற்சி திடீரென இடம் மாறியது. இதைக் கணிப்பது சற்று கடினமானது. இந்த நடைமுறைப் பிரச்னையால் கன மழையைக் கணிக்க முடியவில்லை.

காற்றின் வேகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, சில நேரங்களில் வேகமாக கடந்து விடும். அப்படி நகர்ந்ததால், சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இது மேக வெடிப்பு அல்ல. இந்தகன மழைக்கு மேக வெடிப்பும் காரணமில்லை. மழைப் பொழிவை துல்லியமாக கணிக்க, நவீன உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படுகின்றன’ என்றார்.

இன்று உலகளவில் பூகம்பம், புயல், மழை பற்றிய முன்கணிப்பு தொழில்நுட்பம் சிறந்த முறையில் உள்ளது. இந்திய மாநிலங்களில் வானிலை ஆய்வு மையத்தை இயக்குவது ஒன்றிய அரசு. தகுந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் இறக்குமதி செய்து மாநிலங்களில் வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தும் கட்டாயம் ஒன்றிய அரசுக்கு உள்ளது.

அதில் அரசு அக்கறை காட்டாததால் தான் ஒக்கி புயல் போன்ற துயரங்களை சந்திக்க நேர்ந்தது. தற்போது தமிழ்நாட்டு முதல்வரும் வானிலை மையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு வானிலை மையங்களை மேம்படுத்த வேண்டும். இல்லையேல், மாநில அரசுகள் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்த அனுமதிக்கவேண்டும். இல்லையேல், அறிவியல் பூர்வமான வி்ண்வெளி ஆராய்ச்சி ஜோதிடமாகி குத்து மதிப்பாக மனித வாழ்க்கையை கணிப்பதுபோல், வானிலை ஆராய்ச்சி மையமும் தவறான தகவல்களை கூறும் ஜோதிட நிலையமாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here