பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது குறித்து ஐ.நா பொது சபையின் சிறுபான்மையினர் பாதுகாப்பு கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரமான கராச்சியில் உள்ள பல குடியிருப்புகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு யாரும் வீடுகளை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ வேண்டாம் என உருது மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருந்த இந்த வாசகத்தை, பாகிஸ்தானைச் சேர்ந்த கபில் தேவ் என்ற சமூக ஆர்வலர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் பலர் தாங்கள் வீடு கிடைக்காமல் அவதிப்பட்டதாக கூறியிருந்தனர்.