சிவன் பெயரில் போலி முகநூல்

0
438

 இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் இஸ்ரோ அமைப்பு பெயரில் டுவிட்டர் உள்பட சில சமூக ஊடகங்களில் சந்திரயான்-2 பற்றிய போலியான சமூக ஊடக கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் (கே. சிவன் புகைப்படங்களுடன்) சமூக ஊடகங்களில் கணக்குகள் செயல்பட்டு வருகின்றன என எங்களது கவனத்திற்கு தகவல் வந்துள்ளது.

இஸ்ரோ தலைவர் கே. சிவன் எந்தவொரு சமூக ஊடக தளங்களிலும் தனிப்பட்ட முறையில் கணக்குகள் வைத்திருக்கவில்லை. அதனால் அதுபோன்ற அனைத்து கணக்குகளிலும் உள்ள அனைத்து தகவல்களும் நம்பகத்தன்மை அற்றவை என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து, இஸ்ரோவின் சமூக ஊடக தளங்களுக்கான அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான முகவரிகளையும் வெளியிட்டு உள்ளது. அவை, https://www.twitter.com/isro and https://www.facebook.com/ISRO, Youtube ISRO Official ஆகிய கணக்குகள் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here