தமிழ் மாநில காங்கிரஸ் தென்மண்டல மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:-
வரும் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக மட்டுமல்லாமல், கொரோனா விழிப்புணர்வு நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாட உள்ளோம்.
அதன் மூலம் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் மக்கள் வெளியே வரும்பொழுது கட்டாயம் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு செய்வோம் என்றார்.
‘எய்ம்ஸ் மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை போடுவது போல் விரைவாக முடிக்க முடியாது’ என்ற புதுமை கருத்தைச் சொன்னவர்,’ஆனால் படிப்படியாக ஆரம்பித்து குறித்த காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.