ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது

0
99

விளாத்திகுளம் அருகே

ரஷ்யாவில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி மூன்று நபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி

மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ரங்கராஜ், மாதவராஜ் ஆகிய மூவரும் டிரைவராக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த சுமேஷ் என்பவரின் தெடர்பு கிடைத்துள்ளது.ரஷ்யாவில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக சுமேஷ் கூறியதை நம்பிய மூன்று பேரும், தலா ரூ.2.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 லட்சம் பணத்தை சுமேஷிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் மாரியப்பனை மட்டும் டிக்கெட் வந்துவிட்டது நீங்கள் மும்பை செல்லுங்கள் என்று சுமேஷ் கூற அதை நம்பி மாரியப்பனும் மும்பை சென்று ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். இரண்டு மாதங்கள் ஆகியும் சுமேசிடமிருந்து எந்த சமூகமான தகவலும் கிடைக்கவில்லை. அவரது தொலைபேசி எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த மாரியப்பன் தனது உறவினர் மாதவராஜை திருச்சியில் உள்ள சுமேஷின் அலுவலகத்திற்கு சென்று பார்க்க கூறியுள்ளார்.
மாதவராஜ் அங்கு சென்று பார்த்தபோது அலுவலக நிறுவனத்தையே காலி செய்துவிட்டு சுமேஷ் தலைமறைவானது தெரியவந்துள்ளது.இதையடுத்து மாரியப்பன்,மாதவராஜ் இருவரும் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்சி போலீசார் சுமேஷை தொடர்புகொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்த நிலையில், சுமேஷ் தனது வழக்கறிஞர்களுடன் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் காலையில் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் மறுநாள் சுமேஷ் தனது தொலைபேசி எண்ணை அனைத்து வைத்துவிட்டு எங்கோ சென்று தலைமுறைவாகியுள்ளார்.

இதையடுத்து மாரியப்பன், ரங்கராஜ்,மாதவராஜ் ஆகிய மூவரும் காவல்துறை மேலதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு புதூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.இதுதொடர்பாக புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கினை விசாரித்து மதுரையில் பதுங்கியிருந்த சுமேஷை சுற்றிவளைத்து கைது செய்து
நடத்திய விசாரணையில், ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும், தானும் பல இடங்களில் பணத்தை இழந்துவிட்டதாகவும், சிறிது காலத்தில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் சுமேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுமேஷ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here