சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாப பலி

0
1035

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ஜெபசெல்வி (53) என்பவர் இன்று தனக்கு சர்க்கரை வியாதி பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் செல்வதற்காக பழனியப்பபுரம் தாண்டி இருசக்கர வாகனத்தில் (KTM) அவரும் அவரது மகன் டேவிட் அந்தோணி (24) ஆகிய இருவரும் இன்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பழனியப்பபுரம் தாண்டி செல்லும் வழியில் ஜெப செல்வியின் சேலை இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சிக்கி அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here