நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசனிடம் விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக தங்களுக்கு அனுமதி அளிக்குமாறு அனிமல் சேவர்ஸ் அமைப்பினர் கொரொஇக்கை விடுத்தனர்.
அதையேற்று அனுமதி அளித்ததோடு, அவரும் இன்று நாய், பூனைகளுக்கு உணவளிக்கும் வேலையில் இறங்கினார்.

நெல்லை ரயில் நிலையச் சாலையில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட நாய், பூனைகளுக்கு சீனிவாசன், உதவி ஆணையர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் தன்னார்வ அமைப்புடன் இணைந்து உணவு அளித்தனர். தொடர்ந்து ஊரடங்கு முடியும்வரை இப்பணியை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.