தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகே விஜயஅச்சம்பாடு பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் வந்த பைக் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் நாராயணன் உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த வேல்முருகன் என்பவர் காயம் அடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.










